வியாழன், 7 டிசம்பர், 2023

ஈரோட்டில் 2 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோடு அடுத்த சூளையில் 2 குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஈரோடு சூளை பாரதிநகரை சேர்ந்தவர் இரணியன் என்கிற அலெக்சாண்டர். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சித்ரா. இவர் வினோத் என்ற மகனுடன் சித்ரா தனது வீட்டில் வசித்து வருகிறார்‌. 

இரு வீட்டு மேற்கூரைகளும் ஓலையால் வேலையப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை பூட்டப்பட்டிருந்த இரணியன் வீட்டில் இருந்து கரும்புகை அதிக அளவில் வெளியேறியது, பின்னர் தீப்பற்றி எரிந்தது. 

தொடர்ந்து, காற்றின் வேகத்தால் சித்ராவின் வீடும் தீ பிடித்தது. ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து 45 நிமிடங்கள் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். 

இதில் இரு வீட்டிலிருந்த, ஒன்றரை பவுன் தங்க நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. அணைக்கப்படாத புகை வஸ்துவால் தீப்பிடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேதமதிப்பு 5லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: