திங்கள், 18 டிசம்பர், 2023

ஈரோட்டில் காங்கிரஸ் சேவாதளம் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நாடாளுமன்றத்தில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து காங்கிரஸ் சேவாதளம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் சார்பில், பாராளுமன்றத்தில் 14 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் 100 நாள் வேலை வாய்ப்பில் நான்கு மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும்  கருங்கல்பாளையம் காந்திஜி சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் முகமது யூசுப், மண்டல தலைவர்களான விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சேவாதள தலைவர் குங்ஃபூ விஜயன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர்களான ஈ பி ரவி, ஈ ஆர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாஜலம், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம் ஜவஹர் அலி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டியூ)துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன்,மாநில சேவாதள செயலாளர் எம் பேபி, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விஜய்கண்ணா, காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாவட்ட துணை தலைவர் கே.என்.பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம். தீபா, என் சி டபிள்யூ சி மாவட்டத் தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மாவட்ட பொது செயலாளர்களான இரா கனகராஜன், ஏசி சாகுல் அமீது, ஏ வின்சென்ட்,ஆர் கே பிள்ளை,மாவட்ட நிர்வாகிகளான மரப்பாலம் அய்யூப் அலி பிராமணப் பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த முத்து அப்துல் காதர், ராஜாஜிபுரம் சிவா,குமரேசன், கனி ராவுத்தர் குளம் சபீர் அகமது, ஈரோடு மாநகர் காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் தலைவர் சூர்யா சித்திக், மாவட்ட எஸ் சி பிரிவு முன்னாள் தலைவர் கே பி சின்னசாமி, சைக்கிள் கடை ராஜேந்திரன், ஐஎன்டியூசி ரவி, மாநில சேவாதள நிர்வாகிகளான கோவை செந்தில்,பாண்டு, குமார்,உடுமலை ரேணுகாதேவி, கொடுமுடி கமலா, சரவணன், திருநாவுக்கரசு, ஜெயக்குமார், செந்தில் குமார் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: