இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயகுமார் தலைமையுரை ஆற்றினார். விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் நல்லசாமி வரவேற்புரை வழங்கினார். நிர்வாக அலுவலர் லோகேஸ் குமார் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையை வழங்கினார்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் செல்லமுத்து, சௌமியா, பிரியா ராஜ் நாராயணன் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் ஆனந்த சயனம், ஜனனி ரீஜென் நிறுவனர் மற்றும் மைய செயல் அலுவலர் உஷாதேவி வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேளாளர் கல்வி அறக்கட்டளை இணைச்செயலாளர் நல்லசாமி, துணைத்தலைவர் ரத்தினசாமி, இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் சேர்க்கை ஆலோசகர் குகப்ரியா நன்றி கூறினார். இவ்விழாவில் இயற்கை விவசாயிகள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், இயற்கை வாழ்முறை பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: