தமிழக அரசின் அணைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு நேரடியாக சென்று சேரவேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகாரிகள் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஒரு மாதத்தில் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இத்திட்டத்தை கோவையில் இன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பவானி மெயின் ரோடு பிளாட்டினம் மஹால் திருமண மண்டபம் மற்றும் மாணிக்கம்பாளையம், மஞ்சள் அரிமா சங்க மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். இதனையடுத்து, இன்று மனு வழங்கிய ஒரு நபருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல குழு தலைவர்கள் பழனிசாமி, சுப்பிரமணி, மாநகரப் பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையர் அண்ணாதுரை, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) அம்சவேணி, ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: