ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் தலைமையில் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம்பாளையம் கிராமம் லட்சுமி நகர் பவானி பைப்பாஸ் பகுதி சந்திப்பில் உள்ள சேலம் முதல் கோயம்புத்தூர் வரை செல்லும் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
கர்நாடாக மாநிலத்தில் இருந்து வரும் சரக்கு கனரக வாகனங்கள். ஆம்னி பேருந்துகள், இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகமான பக்தர்கள் வருகிறார்கள், மேலும் பரபரப்பான காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களின் வாகனங்களினால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறுகள் ஏற்படுகின்றன.
அதனால் இந்த சாலையில் மிகுந்த நெருக்கடியான பகுதியாக உள்ளதால் இங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்தால் பெரும்பான்மையான ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும். ஆகவே, இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தர ஆவண செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
0 coment rios: