வெள்ளி, 8 டிசம்பர், 2023

அந்தியூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் வட்டம் பர்கூர் காப்புக்காட்டு பகுதியில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு அங்கு செயல்படும் வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வுக் கூடங்களை பார்வையிட்டார். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்த பள்ளியானது 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் வகையில், 431 மாணவ, மாணவியர்களுடன் செயல்பட்டு வருகின்றது. மேலும், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், எண்ணமங்கலம் ஊராட்சி, கோவிலூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அப்பள்ளியில், பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு பார்த்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.3.03 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு பார்த்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினையும், முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் முதல் நேரு நகர் வரை தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, செலம்பூர் அம்மன் கோவில் பள்ளம் பகுதியில் பழுதடைந்துள்ள பாலத்தினை பார்வையிட்டு, பாலம் சீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்து அகற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளான உள்நோயாளி, புறநோயாளி பதிவேடு, மருந்துகளின் இருப்பு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், அந்தியூர் வட்டாட்சியர் பெரியசாமி, அந்தியூர் உதவிப் பொறியாளர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: