அடி முதல் நுனி வரை பயன் தரக்கூடியது வாழை.
வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை, வாழைப்பூ எல்லாமே அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. வாழைநாரும், வாழைப்பட்டையும் கூட பூவும் நாரும் மணப்பது போல என்று மணக்கிறது.
இப்போதைய காலகட்டத்தில் நாம் அதிகமாக சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று கருத்தரித்தலில் தாமதம் அல்லது குறைபாடு. பெண்கள் முழுமையடையும் தாய்மையில் தாய்மைப்பேறு இயல்பாக கிடைப்பதில் இன்று அதிக குறைபாடு உள்ளது. மன அழுத்தம், தாமத திருமணம், குழந்தைப்பேறை தள்ளிப்போடும் தன்மை இவையெல்லாம் தாண்டி மாறிவரும் உணவு பழக்கங்களும் உடல் உறுப்புகளைப் பாதிப்படைய செய்துவிடுகிறது.
உடல் உறுப்புகளை வலுவாக்கும் உணவுகளை மறந்ததன் விளைவு இன்று பல நோய்களின் பிறப்பிடமாக அமைந்துவிட்டது. பெண்களின் கருப்பை மாதந்தோறும் கருமுட்டைகளை உற்பத்தி செய்து வலுவாக இருக்கும்பட்சத்தில் திருமணம் முடிந்ததும் குழந்தைப்பேறு உண்டாவதில் எவ்வித தடையும் இருக்காதுகருப்பை வளர்ச்சியடையவும் அதனுடைய பணிகள் சீராக நடைபெறவும் வாழைப்பூ உதவுகிறது. சிறிதே துவர்ப்பு கொண்ட வாழைப்பூவை வாரம் இரு முறை எடுத்துக்கொண்டால் கருப்பை பிரச்னைகள், கருப்பை புற்றுநோய் முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைகளைச் சந்திக்காமல் இருக்கலாம்.
வெள்ளைப்படுதல், மாதவிடாய்க் கோளாறுகள், சீரான மாதவிடாய், அந்த நாட்களில் தோன்றும் வயிறு வலி இவை அனைத்தையும் நீக்கும் ஒரே மருந்தாக அரு மருந்தாக வாழைப்பூ விளங்குகிறது. வாழைப்பூவில் இருக்கும் நீண்ட நாவை மட்டும் நீக்கி, பொடியாக நறுக்கி மோரில் சுத்தம் செய்து பருப்பு சேர்த்து கூட்டாகவோ, பொறியலாகவோ சாப்பிடலாம். அல்லது அடையாகவும் வார்க்கலாம்.. வாழைப்பூவை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாகவும் செய்யலாம்
வாழைப்பூவைச் சுத்தம் செய்யும் போது இறுதியில் இருக்கும் அடி குறுத்தை அப்படியே நன்றாக மென்று சாப்பிட்டால் கருப்பை பல மடங்கு நன்மை பெறும். இயன்றவரை எண்ணெயில் பொறித்து வடையாக சாப்பிடுவதை கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடுவதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
வாழைப்பூ ஆண்களுக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்வதை அதிகரிக்கிறது. பெண்களுக்கு மலட்டுத்தன்மையை நீக்குகிறது.. இதுமட்டுமல்ல இன்னும் பல அரிய மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது.. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது, மூலத்தைப் போக்குவது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவது.. என இன்னும் பட்டியல்கள் நீள்கிறது.. அவ்வப்போது பார்க்கலாம்.
குறிப்பாக வாழையடி வாழையாக வாழ தலைமுறைகள் பிறக்கவேண்டுமே.. அதைச் சிறப்பாகவும் வாழை செய்கிறது என்பதால் தான் வாழையடி வாழை என்றார்கள் போலும்..
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: