ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. குண்டம் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து குண்டத்துக்கு தேவையான விறகுகளை மாரியம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்றவைக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் குண்டம் இறங்க, அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
குண்டம் விழாவை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிலை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் அன்னதான விழா அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு வளாகத்தில், சோழீஸ்வரர் அன்னதான குழு பொறுப்பாளர்கள் மாணிக்கம், மணிவர்மா உள்ளிட்டோர் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதான விழாவினை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஒன்றாம் மண்டல தலைவர் பி.கே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த அன்னதான விழாவில், ஈரோடு மாநகராட்சி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா, ஈரோடு நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் அருணகிரி, வட்டக் கழகச் செயலாளர், தியாகராஜன், கஜேந்திரன், ஸபா ரபீக், அன்பு முருகன், ரவிந்திரன், சக்திவேல், சத்தியநாதன், பூங்கொடி, ராமமூர்த்தி, தங்கவேல், செல்வமுருகன், லோகநாதன், கோயில்மணி, கரிக்கோல் ராஜ், கணேசன், குமார், நாச்சிமுத்து, அய்யாவு, துரைசாமி, மதன், பரணியுவி, ஆறுமுகம், ஸ்ரீதர்அருண், சேதுகருப்பையா, திலகவதி, ரமேஷ், டிரைவர் பழனிவேல் ஆட்டோ குணா, மூர்த்தி, தர்மன், தேவர், ஆட்டோ செல்வம், ஜெய்கணேஷ், குப்புராஜ், கார்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அழகரசன் நகர் ஹவுஸிங் யூனிட் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த அன்னதான விழாவை திமுக விவசாய அணி மாநில இணைச்செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் குறிஞ்சி என். தண்டபாணி ஆகியோர் முன்னேற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது.
இந்த அன்னதான வழங்கும் விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அன்னதானம் பெற்றுக்கொண்டனர்.
0 coment rios: