ஈரோடு ரயில் நிலையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவருமான கே.என்.பாஷா ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஈரோடு வழியாக புதிய ரயில்களை இயக்க வேண்டும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஐந்தாவது பிளாட்பார்ம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மனு ஒன்றை அனுப்பினார்.
இந்த நிலையில், அனுப்பிய மனுவின் நகலை முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாஷா வழங்கினார். அப்போது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம், துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா,மாநில பொதுக்குழு உறுப்பினர் வி கே செந்தில் ராஜா, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா,கார்த்திக் ராம்கண் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: