கோபி அருகே அவ்வையார்பாளையம் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு விஜயகுமார் (வயது 35) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கோபி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதன் இறுதியில், மணி மோகன், பூபதிராஜன், நாகராஜ், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு கோபிச்செட்டிப்பாளையம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிமோகன், நாகராஜ், பூபதி ராஜன்,சதீஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் ஒவ்வொருவருக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோபிச்செட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தயாநிதி தீர்ப்பளித்தார்.
0 coment rios: