ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 18ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் 19ம் தேதி (நேற்று) மாலை வரை பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, டீ தூள் பாக்கெட்கள், அரிசி, 2,250 லிட்டர் எண்ணெய், கோதுமை மாவு, பிரட் பாக்கெட்கள், சோப்புகள், போர்வைகள் மற்றும் துணி வகைகள் என 64,403 எண்ணிக்கையில் ரூ.79 லட்சத்து 25 ஆயிரத்து 447 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், பால் பவுடர் பாக்கெட்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், குளியல் சோப்புகள், டீ தூள் பாக்கெட்கள், அரிசி, சேமியா பாக்கெட்கள், போர்வைகள், மிளகாய் தூள் பாக்கெட்கள், மல்லி தூள் பாக்கெட்கள், புளி, கேக், ரஸ்க், மசாலா பொருட்கள், நூடுல்ஸ் பாக்கெட்கள், ரவை, தீப்பெட்டிகள், நாப்கின்கள் என ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்து 952 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார்.
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, கடந்த 3 நாட்கள் (டிச.20) இன்று மாலை வரை, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மொத்தம் ரூ..93 லட்சத்து 81 ஆயிரத்து 399 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: