வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஈரோடு செய்திகள்| Latest Erode News & Live Updates: ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிச.28) காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விஜயகாந்தின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து கடைகள் அடைத்து, பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஈரோடு வீரபத்ர வீதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: