அதனைத் தொடர்ந்து, அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக் ராஜா, அவசரகால மருத்துவ நுட்புனர் பூபதி அன்னக்கொடியை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்து சென்றனர்.
இதனையடுத்து, தேவர்மலை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது அன்னக்கொடிக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். ஓடும் ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ நுட்புனர் பூபதியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
0 coment rios: