இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிசாமி (மண்டலம் -1), சுப்பிரமணியன் (மண்டலம் -2), மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ரூ.1.71 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 2 வார்டு எண் 5, மொக்கையம்பாளையம் முதல் கொளத்துப்பாளையம் பிரதான சாலையில் உள்ள (முனியப்பன் கோயில் பின்புறம்) ஓடையின் குறுக்கே பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், மண்டலம் -1, வார்டு எண் 5 தண்ணீர்பந்தல்பாளையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பைப் லைன் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.71 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
0 coment rios: