இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் குமரன் சதுக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் இன்னுயிர் நீத்த நாளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில், மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலையில், மாவட்டத் தலைவர் நந்தகோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வச்சரவேலு, சீனிவாசன், வைரம், முருகானந்தபதி, பிரதாப், விக்ரம், தங்கமாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: