திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கல்லூரி சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). டெய்லரான இவர் தனது மனைவி சுபாஷினி (வயது 24), மகன் இனியன் (வயது 3) மற்றும் 6 மாத குழந்தையுடன் பைக்கில் செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஓம் சக்தி கோவிலுக்கு மாலை போடுவதற்காக புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனத்தின் வலது புறம் 5 கட்டை பைகளை மாட்டிய படி, 3 வயது குழந்தை பெட்ரோல் டேங்க் மேல் அமர வைத்தும், மனைவி மற்றும் 6 மாத குழந்தை பின்னால் அமர்ந்த படியும் சென்றனர். அப்போது,கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அடுத்த பேரேடு பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத கனரக வாகனம் கடந்து சென்றது.
இதில், காற்றின் வேகத்தில் நிலை தடுமாறி மணிவண்ணன் மற்றும் இரு குழந்தைகளும் இடது புறம் பைக்குடன் விழுந்தனர். வலது புறமாக சாலையில் விழுந்த மனைவி சுபாஷினி அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும், இடது புறம் விழுந்த 6 ஆறு மாத குழந்தை அனன்யா அதிர்ச்சியில் உயிரிழந்தது.
மணிவண்ணன் மற்றும் 3 வயது குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த சித்தோடு போலீசார், காயமடைந்த மணிவண்ணன் மற்றும் 3 வயது குழந்தை, உயிரிழந்த சுபாஷினி மற்றும் 6 மாத குழந்தை உடல்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: