மக்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கும் நீர் நிரப்பி பரிசோதனை முடிவடைந்து விட்டது. இத்திட்ட காலதாமத்திற்கு தமிழக அரசு காரணம் அல்ல.
நாமக்கலில் மதுபானக் கடைக்கு இந்தியில் அறிவிப்பு பலகையை துறை அதிகாரிகள் வைத்திருக்க மாட்டார்கள். இதுதொடர்பாக விசாரிப்படும். இந்தியில் போர்டு வைக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப்பகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என நினைத்து இந்தியில் அறிவிப்பு பலகையை அதிகாரிகள் வைத்திருக்கலாம். தெரியாமல் வைத்திருப்பார்கள். தெரியாமல் சட்டத்தை மீறக்கூடாது. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தண்டனை தான் என்றார்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெற திமுகவுடன் அதிமுக இணைந்து போராட வேண்டும். அதிமுக காலத்தில் நீட் தேர்வுக்கு ஏன் போராடவில்லை என்றார். சட்டவிரோதமாக மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேரம் கடந்து மதுபானங்களை விற்ற 1000க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்கிறார் அவர்.
0 coment rios: