கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து பெங்களூர் வரை செல்லும் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை வந்து நின்றது. அப்போது, ரயிலின் முன்பதிவு ஏசி பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர், ரயில் புறப்பட தயாரான சில நிமிடத்தில் பெட்டியில் இருந்து இறங்கி சென்றார்.
இதை கவனித்த ஈரோடு ரயில்வே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த நபரிடம் விலை உயர்ந்த செல்போன் இருந்ததால், சந்தேகம் அடைந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (வயது 29) என்பதும், ரயில் பெட்டியில் பெங்களூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் செல்போன் சார்ஜரில் இருந்து திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: