வெள்ளி, 19 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: நீட் தேர்வு விலக்கு பெற 85 லட்சம் கையெழுத்து போதுமா? செங்கோட்டையன் கேள்வி

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கியமான ஒரு வாக்குறுதி தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதாகும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். இந்த கையெழுத்து இயக்கம் குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி 743 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் உள்ள காலிங்கராயனின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் உட்பட அ.தி.மு.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கேள்விக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசு தலைவரால் ஒப்புதல் பெறப்பட்டு, 3 ஆண்டுகளாக அமலில் உள்ள சட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 85 லட்சம் கையெழுத்து பெற்று எப்படி நீட் தேர்வில் விலக்கு பெறுவார்கள் என காத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: