நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் சமாதான வண்ண பலூன் பறக்க விட்டனர். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகி மற்றும் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 31 பயனாளிகளுக்கு 19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளி, 26 ஜனவரி, 2024
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: