வியாழன், 4 ஜனவரி, 2024

சுசி ஈமு பார்ம்ஸ், ராஜராஜேஸ்வரி பவுல்ட்ரி நிறுவனங்களின் வாகனங்கள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களின் பேரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கோயமுத்தூர் டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தால் பொது ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாகனம் வரும் 9ம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

இதற்கான ஏல நிபந்தனைகளுடன் கூடிய பொது ஏல அறிவிப்பு விபரம் ஈரோடு மாவட்ட இணையதள முகவரியான http:// www.erode.tn.nic.in/ -ல் பார்வையிட்டு நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.10 ஆயிரம் தொகையினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் "Competent Authority and District Revenue Office, Erode" என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவாக பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து 9ம் தேதியன்று காலை 10.30 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல, ராஜராஜேஸ்வரி பவுல்டரி நிறுவனத்தின் இருசக்கர வாகனமும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.5 ஆயிரம் தொகையினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் "Competent Authority and District Revenue Office, Erode" என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவாக பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து 9ம் தேதியன்று காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அறிவிப்பு, நிபந்தனை விவரங்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம், ஈரோடு,கோபி கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: