வெள்ளி, 19 ஜனவரி, 2024

காலிங்கராயருக்கு ஓபிஎஸ் அணி சார்பில் மரியாதை

காலிங்கராயன் கால்வாயை பாசனத்துக்கு அர்ப்பணித்த, காலிங்கராயருக்கு தை ஐந்தாம் நாள் விழாவையொட்டி, பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் அமைந்துள்ள அவர் சிலைக்கு, ஓபிஎஸ் அணி சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது. 
ஈரோடு மாநகர் மாவட்டச்செயலாளர் தங்கராஜூ, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மாரப்பன் ஆகியோர் தலைமையில், இளைஞர் அணி இணை செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகர் முன்னிலையில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சிதம்பரம், நாகலிங்கம், பகுதி செயலாளர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் விளகேத்தி சேகர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பழனிச்சாமி, செளகத் அலி, சீனிவாசன், அஷ்ரப் அலி, வானவில் மனோகரன், சார்பு அணி நிர்வாகிகள் கவுந்தி செங்கோட்டையன், சூரம்பட்டி செல்வம், தனசேகர், நவீன் குமார், சிவராஜேஷ், வீரபாபு, செல்வம், முகமது உசேன், தலைமை பேச்சாளர் சின்னதம்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ரமணிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: