சனி, 20 ஜனவரி, 2024

ஈரோட்டில் உரிமை கோராத இருசக்கர வாகனங்கள் 22ம் தேதி ஏலம்

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

ஈரோடு மாவட்டத்தில் உரிமை கோராத 219 இரண்டு சக்கர வாகனங்கள் ஆனைகல்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை மறுநாள் (22ம் தேதி) காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. வாகனங்களை நாளை (21ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.

வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை நாளை மறுநாள் காலை 7 மணி முதல் காலை 10 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன்பணம் செலுத்தவேண்டும். மேலும், முன்பணத் தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதம் முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம், ஈரோடு என்ற முகவரிலோ, 9498174688 மற்றும் 9976057118 என்ற கைப்பேசி எண்களிலோ தொடர்ந்து கொள்ளலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: