ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மணியன் மெடிக்கல் சென்டர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ, ரத்த தான முகாம் ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜாபர் அலி தலைமை வகித்தார். முகமது நபி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் திருப்பூர் ஹாலிதீன் பங்கேற்றார். முகாமிற்கு வந்திருந்த பொது மக்களுக்கு இலவசமாக ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனை, பற்களில் ஏற்பட்டிருக்கிற குறைபாடுகள் குறித்தான பரிசோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு ஏராளமானோர் தங்களது ரத்தத்தை தானமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் போக் சேட், ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சாபிரா பேகம் முத்து பாவா, முத்தவல்லி இஸ்கந்தர், ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: