சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய தமிழ்ப்புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி கும்பலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் பல்வேறு அமைப்பு மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய தமிழ்ப்புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி கும்பலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் கொடுமுடி கல்வெட்டுப்பாளையம் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணகுமார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் மா.வெள்ளியங்கிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளம்புலிகள் மாவட்ட செயலாளர் செ.பூபதிவள்ளுவன், மத்திய மாவட்ட செயலாளர், இரா.சிந்தனைச்செல்வன் முன்னிலையில், தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் நாகை.திருவள்ளுவன் கண்டன உரையாற்றினார். சமூகநீதிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்
கண.குறிஞ்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் ஏ.சித்திக், தலைவர்,சமூக நீதி ம.கட்சி இரா.வடிவேல் ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் லுக்மானுல் ஹக்கிம், த.பெ.தி.க. மாவட்டச் செயலாளர் ந.வெ.குமரகுருபன், தி.வி.க ப.இரத்தினசாமி, டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், புரட்சிகர இளைஞர் முன்னனி பிரேம்நாத் உள்ளிட்ட தோழமை அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பலரும் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி கோஷங்களை எழுப்பினார்.
0 coment rios: