ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, பல்வேறு கோரிக்கை குறித்து மொத்தம், 342 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
0 coment rios: