கோவையில் இருந்து 13 பெண்கள், 5 ஆண்கள், 3 குழந்தைகள் என 18 பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து சென்றனர். கோவிலில் இருமுடி செலுத்தி விட்டு இன்று அதிகாலை வேனில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அடுத்த பச்சபாளிமேடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற பழைய இரும்பு பொருட்கள் ஏற் றுச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் வந்த 9 பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 coment rios: