ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தது. சிறிது நேரம் சாலையில் நடமாடிய கரடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கரடி சாலையில் நடமாடிய காட்சி அப்பகுதியில் - பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதி பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது
0 coment rios: