கூடா நட்பு கேடாய் முடிவதற்கு உதாரணம் ஆக திமுகவுடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜி பலிகடாகிவிட்டார். அவர் நல்ல உடல் நலத்துடன் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதே அமமுகவின் விருப்பம்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் உள்ள ரவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பொறுப்பாளர்களின் செயல்பாடுகள், கள நடவடிக்கைகள், பிரச்சார அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அமமுக வலுவான கூட்டணியுடன் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும், துரோகிகளுக்கு தெற்கு மற்றும் டெல்டா பகுதியில் 3வது இடம் கிடைக்கும் என்றும் தினகரன் தனது உரையில், 2019 தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றது. அந்த வாக்கெடுப்பில், நாங்கள் பிரதமர் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால், இப்போது நாங்கள் எங்கள் பிரதமர் வேட்பாளரை நிறுத்துகிறோம். மாநிலம் முழுவதும் 75 மற்றும் 50 ஆண்டு பழமையான கட்சிகளுக்கு இணையான வலுவான அடித்தளத்தை கட்சி கொண்டுள்ளது. இப்போது, இபிஎஸ் அணி எங்களை எதிர்கொள்ள பீதியில் உள்ளது. அடிமட்டத்தில் இருந்து ஆட்சிக்கு வந்ததாக இபிஎஸ் சொன்னாலும், முதல்வர் பதவியை பெறுவதற்கு அவர் தவழ்ந்து வந்து பெற்றார்.
தினகரன் யார் என்று ஈபிஎஸ் கேட்டாலும், ஆர்.கே.நகரில் எனக்காக கேன்வாஸ் செய்தார். கடந்த தேர்தலில் அவர் அதிகம் செலவு செய்தாலும், இபிஎஸ் அணி மொத்த தோல்வியை சந்தித்தது. சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைவர் அமித் ஷாவே, இபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். ஆனால், அவரது ஆலோசனையை நிராகரித்து தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து நடந்த தேர்தல்களிலும் பெரும் பணத்தை செலவழித்து தோல்வியை சந்தித்தார். வரும் லோக் சபா தேர்தலில் இபிஎஸ்ஸின் உண்மை நிறம் அம்பலமாகலாம். அ ம மு க என்பது EPS அணியைப் போன்ற ஒரு டெண்டர் கட்சி அல்ல, அது தமிழகம் முழுவதும் வலுவாக உள்ளது, என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த தினகரன், பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கட்சியாக அமமுக இருக்கும்.. மக்கள் தொகை கணக்கீட்டின்படியே இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக இட ஒதுக்கீடு அறிவித்து ஏமாற்றியது. அவர்களின் துரோகத்திற்கு ஏற்ப தண்டனையை சிறுபான்மை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வழங்குவர்.
எடப்பாடி பழனிசாமி பதவிக்காக கழுத்தையும் பிடிப்பார் காலையும் பிடிப்பார் எனவும் கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
தொடர்ந்து திமுக அரசை குற்றம் சாட்டிய டிடிவி தினகரன் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறரை லட்சம் கோடிகள் பெற்றதை சாதனையாக திமுக கூறி வார்த்தை காலங்களில் ஓட்டி வருகிறது..
இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி அரசியல் கட்சிகள் கூறிவரும் நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் மக்கள் யாரை ஏற்றுக் கொண்டனர் என்பது தெரியவரும். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசியல் செய்வதாக அமைச்சர் கூறும் நிலையில் திமுகவை தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசியல் செய்வதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நெருங்கி பழகிய செந்தில் பாலாஜி கூடா நட்பு கேடாய் முடிந்ததற்கு உதாரணமாக திமுகவோடு இணைந்து வழி கெடா ஆகிவிட்டார் அவர் நல்ல முறையில் உடல் நலத்துடன் வெளியே வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.
சி.சண்முகவேலு, சம்பத், ஏ.விசாலாக்ஷி, என்.கே.துளசிமை, தரணி சண்முகம், ஏ.எம்.சிவபிரசாத், செல்வம், சரவணக்குமார், என்.ஆனந்த்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
0 coment rios: