இதில், நோய்களின் தன்மைக்கு ஏற்ப முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்து மருத்துவ உதவியாளா்களுக்கும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, பராமரிப்பது குறித்து ஓட்டுநா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில் சென்னை பயிற்சியாளர் ரஞ்சித், சேலம் மாவட்ட மேலாளர் குமரன், ஈரோடு மாவட்ட மேலாளர் வசந்த் கவின், வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். மேலும், இப்பயிற்சியானது ஊழியர்கள் ஊக்கத்துடனும் சிறப்பாகவும் செயல்படுவதற்கு ஊக்கமாக இருந்தது.
ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 1,350 எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. 4,000க்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளா்கள், ஓட்டுநா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஆம்புலன்ஸ் நிா்வாகம் மூலம் 6 மாதங்களுக்கு ஒருமுறை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டிபி ஹாலில் நடைபெற்றது.
0 coment rios: