ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பான ஆயத்த மாநாடு சனிக்கிழமை (இன்று) நடந்தது.
பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 26ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
முன்னதாக வரும் 15ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பு மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், ரமேஷ், மதியழகன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் தங்கவேலு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில மகளிரணி செயலாளர் ராமாராணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் பிரகாசம், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கணிணி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் ரவிக்குமார், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இம்மாநாட்டில், ஏராளமாக ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: