இதில், 2000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், 250-க்கும் மேலான நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பல வகையான பழமை சாா்ந்த பொருள்கள், சாதனங்கள், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், புதிய வகை நாணயங்கள், அஞ்சல் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சிக்கு, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். சேலம் பாரா மஹால் நாணய சங்க இயக்குனர் சுல்தான் நாணயங்கள், தபால் தலை குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். நாணய சேகரிப்பாளர் வெங்கடாசலம் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
இக்கண்காட்சியில், கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் அங்கயற்கண்ணி , தாவரவியல் துறை பேராசிரியர் மோகன்ராஜ், வரலாற்று துறை தலைவர் மதுசுதர்சனன், பேராசிரியர்கள் அம்சா, குருசாமி, சரவணன், புவனேஸ்வரி, சரஸ்வதி, திவ்யா, காங்கிரஸ் பிரமுகர் முகமது அர்சத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கண்காட்சியில், வைக்கப்பட்டு இருந்த நாணயங்களை கல்லுாரி மாணவ, மாணவிகள் கண்டு வியந்தனர்.
0 coment rios: