அப்போது, ஒரு வீட்டில் 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், ஹாலகுருஹோப்பிலி பகுதியைச் சேர்ந்த, அனந்தா (வயது 26), சிவாஜி (வயது 26), ரவி (வயது 25), சூர்யா (வயது 25) ஆகியோர் பண்ணாரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
0 coment rios: