சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை நடத்திய சக்தி சிறப்புப்பள்ளி, மறுவாழ்வு மைய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித் தொகை வழங்கும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் சாந்தி துரைசாமி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜய் டிவி நீயா-நானா புகழ் கோபிநாத் சந்திரன், சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கியும், வழிகாட்டி திட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கியும், வழிகாட்டி திட்டத்திற்கு தொடர் ஒத்துழைப்பு நல்கி வரும் 41 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை கௌரவித்தும் மற்றும் விருட்சம் திட்டத்தின் கல்வி உதவித்தொகை பெறும் 98 மாணவ மாணவியர்களுக்கு வரைவோலைகளை வழங்கி பேசினார்.
விழாவிற்கு வந்திருந்த அனைத்து சிறப்பு குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்புப்பள்ளி மாணவ, மாணவிகளின் கைத்திறன் படைப்புகள் அனைவரின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.விழா முடிவில் டாக்டர் நாகராஜ் நன்றி கூறினார்.
0 coment rios: