ஈரோடு மாவட்டம் மாமரத்துபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் பணம் எடுக்க திணறியதால் அருகில் நின்ற வாலிபர் தான் உதவி செய்வதாக கூறி அவரது இருந்து ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்டு மாரியப்பன் கூறிய ரகசிய எண்ணை அழுத்தி அவருக்கு பணம் எடுத்து கொடுத்தார்.
அப்போது அந்த நபர் மாரியப்பனை திசை திருப்பி தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்து விட்டார். பின்னர் மாரியப்பன் அந்த நபருக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான குறுஞ்செய்தி வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரூ.12 ஆயிரம் எடுக்காமல் பணம் எடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்தியை கண்டு குழம்பினார். பின்னர் அவர் உடனடியாக வங்கிக்கு சென்று இது குறித்து கூறினார்.
அப்போது உங்கள் ஏடிஎம் கார்டில் இருந்து தான் 12,000 ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர். தான் பணம் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். இதை அடுத்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த நாளில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாரியப்பனுக்கு பணம் எடுக்க உதவிய அந்த வாலிபர் அவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை திருடி வைத்திருப்பது பதிவாகி இருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் எடுத்ததும் அதில் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் அந்த நபரை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி நடந்த இந்த நூதன மோசடி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: