ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதில், சங்கத்தின் தலைவர் தனபால் தலைமையில் பொதுச் செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட குழு உறுப்பினர் பாரதி மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: