அப்போது, அரசு நகர பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், நிலை தடுமாறிய அரசு பேருந்தின் இயக்கத்தை ஓட்டுநர் அருண்குமார் (வயது 33) என்பவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அரசு பேருந்து, எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து , மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்ததுடன் லேசான சேதமும் ஏற்பட்டது. இதனால் ஈரோடு கரூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், கிரேன் உதவியுடன் பேருந்துகளை அப்புறப்படுத்தி மொடக்குறிச்சி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
0 coment rios: