ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் கே.டி.கே. தங்கமணி வீதியைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், ஜோதிலட்சுமிக்கு தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். ஜோதிலட்சுமி வீட்டின் அருகே அவரது தாய் வீடும் உள்ளது.
தினமும் இரவு ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன்கள் அருகில் இருக்கும் தாய் வீட்டில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் ஜோதிலட்சுமி தனது மகன்களுடன் அருகில் இருக்கும் தாய் வீட்டுக்கு தூங்க சென்று விட்டனர். இன்று காலை ஜோதிலட்சுமி எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையின் பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனத்தில், ஒரு இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
0 coment rios: