இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு. 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் வேளாளர் கல்வி நிறுவனங்கள் சார்பில், ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மாதிரி இவிஎம் மூலம் (தெர்மாகோலில் செய்யப்பட்டது) மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வு செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாளர் கலை அறிவியல் கல்லூரி, வேளாளர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதல் முறை வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேளாளர் கல்வி நிறுவனங்களை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு மாதிரி வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு, வாக்காளர் உதவி நோடல் அலுவலர் கீதா, தேர்தல் மாவட்ட ஐகான் கோமதி கல்யாண், வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார். யங் இன்டியன்ஸ் தலைவர் சரவணன், இணைத் தலைவர் யாதவி யோகேஷ் மற்றும் வேளாளர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர்ஸகலந்து கொண்டனர்.
0 coment rios: