அப்போது அவரது செல்போனை அவரது மனைவி எடுத்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் கவின்குமார் மற்றும் இரண்டு பேருடன் ரமணிசந்திரனின் வீட்டிற்கு சென்று செல்போனில் எனது மனைவியிடம் ஏன் பேசினாய் எனக் கேட்டு, ரமணிச்சந்திரன் அவரது தாய் கோகிலா, தந்தை சண்முகம் ஆகிய மூன்று பேரை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கோகிலா, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அவரது தாய் கோகிலா கொடுத்த புகாரின் மீது அறச்சலூர் போலீசார் அறச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலரும், பாஜக மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான கவின்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பாஜக மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும், அறச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலருமான கவின்குமார் (வயது 28), குமார் (வயது 33), பரமேஷ்வரன் (வயது 27), பிரபு (வயது 41) ஆகிய நான்கு பேரை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.
0 coment rios: