ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமாயாள். இவர், தனது விவசாய நிலத்துக்கு விவசாய மின் இணைப்பு வழங்கக் கேட்டு கடந்த 2016ல் கோபி மின் வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் மின் இணைப்பு வழங்க உதவி செயற்பொறியாளர் கேசவன், உதவி பொறியாளர் விஸ்வராஜ், போர்மேன் பழனிசாமி ஆகியோர் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, ராமாயாள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தார்.
அவர்களது ஆலோசனையின்படி, மின் வாரிய அலுவலர்கள் மூவரிடமும் ராமாயாள் ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கிய போது, மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புப் போலீசார் 3 பேரையும் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஈரோடு தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன் இவ்வழக்கின் தீர்ப்பை வெள்ளிக்கிழமை (இன்று) வழங்கினார்.
அதில், உதவிச் செயற்பொறியாளர் கேசவன், உதவிப் பொறியாளர் விஸ்வராஜ், போர்மேன் பழனிசாமி ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 coment rios: