இதைப்போல் சரக்கு வேனில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வாகனங்கள் மோதியதும் காரின் முன் பகுதியும் சரக்கு வேனின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து நடந்ததும் இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: