இரண்டாம் நாளான இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கழக புரட்சித் தலைவி பேரவை மாநில துணை செயலாளரும், ஆற்றல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான ஆற்றல் அசோக்குமார் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அதிமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
ஈரோடு தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் விருப்ப மனு
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் பெற தொடங்கினர்.
0 coment rios: