வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பெருந்துறையில் நாளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில மாநாடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளையில் மாநாட்டு திடலில் கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, அவர் கூறியதாவது:-

பெருந்துறை அருகே சரளையில் நாளை (4ம் தேதி) கொமதேக எழுச்சி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டுக்கு பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். காலை 8 மணிக்கு கோவை பேரூர் ஆதினம், சரவணம்பட்டி ஆதினம் மாநாட்டு வேள்வியை நடத்துகின்றனர். 9 மணிக்கு மாநாடு துவங்குகிறது. மாலை வரை நடக்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் இடையே கலை நிகழ்ச்சியும், கட்சியின் பொறுப்பாளர்களும் பேச உள்ளனர்.

மாலையில் 16 ஆயிரம் பேர் பங்கேற்கும் வள்ளி கும்மி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. மாநாட்டின் முன்பகுதியில் விவசாய கண்காட்சி, வேலைவாய்ப்பு பதிவு முகாம், மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை நோக்கி இம்மாநாடு நடத்தப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மாநாட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

நடிகர் விஜய் கட்சி துவங்கி இருப்பதை வரவேற்கலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழகத்தில் பல நடிகர்கள் கட்சி துவங்கி உள்ளனர். சினிமா மாதிரி அரசியல் இல்லை. தொடர்ந்து கட் சியை நடத்துவது சிரமம். விஜயகாந்த், பாக்கியராஜ், சீமான், டி.ராஜேந்தர் என நடிகர்கள் பலரும் கட்சி தொடங்கி நடத்தியவர்கள் தான். நடிகராக இருக்கும் போது எல்லா கட்சியினரும் அவருடன் இருப்பார்கள். அவரை பார்ப்பார்கள். கூட்டம் கூடுவார்கள்.

அரசியல் கட்சி துவங்கும் போது, தேர்தலில் அவர் எவ்வளவு ஓட்டு பெறுகிறார் என்பதை கணக்கில் கொண்டு தான் முடிவு சொல்ல முடியும். விஜய் நடிப்பை விட்டு முழு நேர அரசியலுக்கு வருவதால் அதற்கான எதிர்மறை விமர்சனங்கள் வர வாய்ப்பு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கையாகவே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்வது என்பது சோதனை என்பது இந்தியா முழுவதும் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் அதிகமாக நடக்கிறது. இதில் தவறு கண்டறியப்படவில்லை. சீமானுக்கு எதிரா அல்லது எச்சரிக்கை விடுவது போல செய்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

பேட்டியின் போது, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், மாநிலப் பொருளாளர் பாலு, மாநில இளைஞரணிச் செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: