மேலும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த கோவிலில் மண்விளக்கு பூஜை நடைபெறும். இதேபோல் பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதேபோல் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
0 coment rios: