ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் மற்றும் புதிய திராவிடர் கழகத்தின் சார்பில் கொங்கு நாட்டின் சமூக நீதி மாநாடு மற்றும் ஐந்தாவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) நடைபெற இருந்தது.
இந்த நிலையில், மாநாடு நடத்த அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு என தெரிய வருவதாலும், மாநாடு நடைபெறும் இடமானது போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் மிக முக்கியமான பகுதியாக உள்ளதாலும், மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, வரும் 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெருந்துறையில் பைபாஸ் சாலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் சமூக நீதி மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. எனவே, சமூகநீதி மாநாட்டு பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென புதிய திராவிட கழக நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் அறிவித்துள்ளார்.
மேலும், இன்று நடைபெற இருந்த மாநாட்டில் திமுக அமைச்சர்களான முத்துசாமி, ராஜ கண்ணப்பன், நேரு உட்பட பல அமைச்சர்கள் பங்கேற்க இருந்த நிலையில், மாநாட்டிற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: