காலிப்பணியிடங்களை நிரப்பிக் கோரி ஈரோட்டில் ரயில் ஓட்டுநர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையை 10 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். வார ஓய்வை 40 மணி நேரமாக வழங்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்ப அனுப்பிட வேண்டும். தொடர் இரவுப் பணியை இரண்டாகக் குறைத்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தனியார் மயத்தைக் கைவிட வேண்டும். 16,373 ரயில் ஓட்டுநர் காலியிடங்களை நிரப்பிட வேண்டும். விருப்ப பணியிட மாறுதலை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கிய போராட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தொடர்ந்து, நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சிஐடியு மாவட்ட துணை செயலாளர் பிஜு (டிஆர்இயு) போராட்ட நிறைவுரை ஆற்றினார். இறுதியாக, கோட்ட துணை பொருளாளர் சஜீர் நன்றி கூறினார்.
0 coment rios: