இதுகுறித்து ஈரோடு மாவட்ட ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம், திருநகர் காலனி என்ற பகுதிகளில் பெண் குழந்தைகளை கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி தற்போது பரவி வருகிறது. அது உண்மைக்கு புறம்பான செய்தி. இதை கண்டு பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோட்டில் பெண் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டு உள்ளார்.
0 coment rios: