அப்போது கோவிலை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் இரண்டு மாதம் கோவிலை இடித்தவர்கள் மீது இதுவரை போலீசார் கைது செய்யவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசரை கண்டித்து ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 coment rios: