இந்துக்கள் பயன்படுத்தும் சூடம் , ஊதுபத்தி, சாம்பிராணி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி போடப்பட்டு உள்ளதை கண்டித்தும், நாளுக்கு நாள் உயரும் பூண்டு விலை உயர்வை கண்டித்தும் இந்த விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் மகளிர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, ஈரோடு மாநகர மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் புதன்கிழமை (இன்று) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீபா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். 4ம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரவி, ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவகர், மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது , வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்துஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்கத்தின் விலை போல வெள்ளைப் பூண்டின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் கயிற்றில் தங்கத்துக்கு பதில் வெள்ளைப் பூண்டை கட்டி அதை கையில் ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
0 coment rios: